Wednesday, January 6, 2010

சென்னை புத்தகக்கண்காட்சியில்...


சென்னையில் டிசம்பர் 31ந்திகதி ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கும் புத்தககண்காட்சியில் எனது நாவலான "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" உட்பட வடலி பதிப்பகத்தின் ஏனைய புத்தகங்களும் விற்பனையாகின்றன.


சென்னைப் புத்தக காட்சியில் வடலி வெளியீடுகளான கே.எஸ்.பாலச்சந்திரனின் - கரையைத் தேடும் கட்டுமரங்கள்" (நாவல்), த.அகிலனின் " மரணத்தின் வாசனை" (சிறுகதைகள்), கருணாகரனின் "பலி ஆடு" (கவிதைகள்), கானாபிரபாவின் "கம்போடியா - தொன்மங்களை நோக்கி" (பயண நூல்), கொலை நிலம் ஆகிய புத்தகங்கள் கீழ்வரும் ஸ்டால்களில் கிடைக்கும்..

பரிசல் புத்தக நிலையம் - எண் 386

புலம் எண் 464

peopels watch எண் 13

உன்னதம் எண் 379

கருப்புபிரதிகள் எண் 271

பொன்னி எண் 226

கீழைக்காற்று 65

எங்கு கிடைக்காவிட்டாலும்.. புலம் ஸ்டால் எண் 464 ல் கிடைக்கும். எங்கள் புத்தகங்களை வாங்க ஆவலாயுள்ள நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்..--

Tuesday, January 5, 2010

புத்தகங்கள்..புத்தகங்கள்

தமிழ் இணையத்தின் வருகையினால் புத்தகங்கள் வாசிப்பவர் தொகை குறைந்து போகிறது என்று யார் சொன்னது? இணையத்தில் எழுதுபவர்கள் கூட தங்கள் படைப்புகள் அச்சில் வரும் கனவுகளோடுதான் இருக்கிறார்கள். என்னதான் இருந்தாலும் அச்சிட்ட காகிதங்கலை வருடியவாறே வாசிக்கும் மகிழ்வு வருமா?

எத்தனை புத்தக வெளியீட்டு விழாக்கள்..வம்சி புக்ஸ் வெளியீடுகள், உயிர்மை வெளியீடுகள், ஜெயமோகனின் புத்தகங்கள், சாருநிவேதிதாவின் புத்தகங்கள், காலச்சுவடு வெளியீடுகள், மித்ர வெளியீடுகள், வடலியின் இலங்கை படைப்பாளர்களின் நூல்கள், அகநாழிகை வெளியீடுகள்,

போதாதற்கு சென்னை புத்தக கண்காட்சி வேறு....
பலா பட்டறை(இந்தகுறிப்பை பாருங்கள்)

சங்கரின் புத்தக கண்காட்சி விஜயம் - 4ம் நாள்

வம்சி புக்ஸின் 40 புத்தகங்கள்

வம்சி புக்ஸ் 2010க்கென 40 புத்தகங்களை வெளியிடுகின்றது.
அட்டைப்படங்களை பார்த்தே இப்புத்தகங்கள் மீது காதல் கொண்டுவிட்டேன். மலையாள எழுத்தாளர் கெ.ஆர்.மீராவின் "சூர்ப்பனகை" (தமிழில்: கே.வி.சைலஜா)
சிறுகதைத்தொகுதி பற்றிய சிறுகுறிப்பு ஒன்றே அந்த புத்தகத்தை எப்போது வாசிப்பேன் என்று ஏங்கவைக்கிறது.

பவா செல்லத்துரைக்கு எனது நன்றிகள்..பின்வரும் குறிப்பு அவருடையது..
(19. டி.எம்.சாரோனிலிருந்து...)

புதுப்படைப்புகளுக்கிடையே
புத்தக கண்காட்சிக்காக எங்கள் வீடே உற்சாக மனநிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. சுமார் 40 புத்தகங்கள் நிச்சயம் வந்துவிடும் என்ற நம்பிக்கை உறுதிபடுகிறது. இம்முறை "வம்சி புக்ஸ்" க்காக இரு புகழ் பெற்ற சர்வதேச புகைப்பட கலைஞர்களும் புத்தக வடிவமைப்பாளர்களுமாகிய அபுல்கலாம் ஆசாத் (கொச்சின்) பினு பாஸ்கர் (தோகா) இருவரும் 20 க்கும் மேற்பட்ட அட்டைப்படங்களை வடிவமைத்து தந்திருக்கிறார்கள். இருவருடைய புகைப்படங்களுக்குமே சர்வதேச சந்தையில் ஒரு புகைப்படத்தின் மதிப்பு ஓரு லட்சம் ரூபாய்க்கு மேலே. "பிளாக் மதர்" என்ற தலைப்பில் கொடுங்கல்லூர் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை அபுல் பதிவுச்செய்திருந்த நேர்த்தி சொல்லில் அடங்காதது. பார்க்கவேண்டியது.

பெண்ணியச் சிந்தனைகளை கலாப்பூர்வமான படைப்பாக்கி புதிய தீவிரத்தோடு எழுதும் கே.ஆர்.மீராவின் எட்டுக் கதைகளை ஷைலஜா மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறார் ”செய்திகளின் நாற்றம்” என்ற கதை முழுமையடைய நேற்றிரவு 2 மணியானது (ஜனவரி மாத உயிர்மையில் வருகிறது) விடிவதற்குள் எங்களில் யாருக்காவது மனப்பிறழ்வு ஏற்பட்டுவிடுமோ என பயந்தோம். ஒரு நல்ல படைப்பு தரும் தீவிரமிது.

அபுல் கலாம் ஆசாத், பினு பாஸ்கர் இருவரின் சில புத்தகங்களுக்கான புகைப்படங்களையும் வடிவமைப்புகளையும் தங்கள் பார்வைக்கே முன் வைக்கிறேன்.
(மிகுதி விபரத்தையும், மற்றைய அழகான அட்டைப்படங்களையும்
இங்கே போய்ப்பாருங்கள்)உயிர்மையின் புத்தக வெளியீட்டு விழாக்கள்
2009 டிசம்பர் 25ஆம் திகதி மாலை ஐந்தரை மணிக்கு சென்னை அண்ணாசாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் அரங்கில் (எல். எல்.ஏ. நூலகம்), 12 புத்தகங்கள் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்படுகின்றன.அவற்றுள் வ.ஐ.ச.ஜெயபாலனின் குறுநாவல் தொகுப்பான "அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது", தமிழ்நதியின் குறுநாவலான 'கானல் வரி்'யும் அடங்கும்.

சனிக்கிழமை २६ 12. 2009 மாலை ரவிக்குமாரின் புத்தகங்களையும் உயிர்மை வெளியிடுகிறது.

ஞாயிற்றுகிழமை மாலை (27டிசம்பர்) கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனின் கவிதை நூலானது குமாரராஜா முத்தையா அரங்கம் ராஜா அண்ணாமலைபுரத்தில் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்படுகிறது.அகநாழிகை இணையப்பதிவர்களின் படைப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறது.