
இலங்கையின் தினக்குரல் பத்திரிகையில் எனது "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" நாவல் பற்றிய அறிமுகம் வெளிவந்துள்ளது.
"எழுத்தின் ரசனை இலக்கியத்துக்குள்ளேயே பொதிந்திருக்கும். துல்லியமாக தன்னுள்ளே சமூக உணர்வுகளின் வெளிப்பாடுகளினை எழுத்துக்களால் இங்கிதமாக ரசனையுடன் படைக்கப்படும் படைப்பாக அமைகிறது. இவ்வாறு தனக்கென்று தனியான இடத்தினை இறுகப்பிடித்துள்ள நாவல்களின் தோற்றம் இன்றைய காலங்களில் அருமையாகவே காணப்படுகின்ற நிலையில் ஈழத்து நாவல் இலக்கிய வரலாற்றில் ஒரு காலச்சுவடாய் நிலைக்கக்கூடிய படைப்பாக, புலம்பெயர்ந்த பின்னரும் தாயகத்தின் சமூக நினைவுகளை பாதுகாப்பாகவும், பசுமையாகவும் சுமந்து வாழும் ஒரு படைப்பாளியின் சிற்பமாக "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" நாவல் நூலகத்துள் வருகை தந்துள்ளமை ஈழத்து தமிழ் நாவல் இலக்கியச்சமூகத்திற்கு கிடைத்துள்ள அரும்சொத்தாகும்......"
இவ்வாறு தொடர்கிறது இந்த அறிமுகம்..