விக்கிபீடியா(தமிழ்)முதல்பக்கத்தில் இரண்டாவது முறையாக என்னைப்பற்றிய குறிப்பை இடம்பெறச்செய்து கெளரவித்தது சந்தோசமாக இருந்தது..டிசம்பர் 25 முதல்..
முதற் பக்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து
முதற்பக்கக் கட்டுரைகள்
திருடப்பட்ட தலைமுறைகள் (Stolen Generations) எனப்படுவது ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மற்றும் டொரெஸ் நீரிணை தீவினர்களின் குடும்பங்களில் இருந்து ஆஸ்திரேலிய அரசினாலும் திருச்சபை மடங்களினாலும் அப்போதைய அரசுகளின் இனங்களை ஒன்றிணையச் செய்யும் கொள்கைகளுக்கமைய கிட்டத்தட்ட 1869 முதல் (அதிகாரபூர்வமாக) 1969 வரையான காலப்பகுதிகளில் ஆயிரக்கணக்கில் கட்டாயமாகப் பிரிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்ட குழந்தைகளின் தலைமுறைகளை அடையாளமிட்டுக் கொடுக்கப்பட்ட பெயராகும். 2008இல் பிரதமர் கெவின் ரட் இந்நடவடிக்கையை ஒரு மனித உரிமை மீறல் என அறிவித்து அத்தலைமுறையினரிடம் பகிரங்க மன்னிப்புக் கோரினார்.
--------------------------------------------------------------------------------
எறும்பு குழுவாக வாழும் ஒரு பூச்சியினமாகும். இவை மிகவும் வியக்கவைக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட சமூக வாழ்வைக் கொண்டிருப்பனவாகும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் அல்லது குழுவில் உள்ள எறும்புகள் தமக்கிடையே பரிமாறிக் கொள்ளும் வேதிப்பொருள் வழிப்பட்ட தொடர்பாடலானது மிகவும் சிக்கலானதும், இலகுவில் புரிந்து கொள்ளப்படாததாகவும் இருக்கிறது. 2009 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இவற்றின் எண்ணிக்கை உயர் எல்லையாக, கிட்டத்தட்ட 22,000 இனங்கள் இருப்பதாக அறியப்படுகிறது. எறும்புகளின் மிகவும் ஒழுங்காக கட்டமைக்கப்பட்டிருக்கும் சமூக வாழ்வு, தமது வாழ்விடத்தை தமக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் இயல்பு, தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்ளும் திறன் போன்றவையே எறும்புகளின் வெற்றிக்கான காரணங்களாக கருதப்படுகின்றன.
மேலும் கட்டுரைகள்..
உங்களுக்குத் தெரியுமா
டிசம்பர் 5, 1969 இல் அமெரிக்க படைத்துறையின் உயர் ஆய்வு திட்டங்கள் நிறுவனத்தால் (DARPA) நான்கு கணினிகள் இணைககப்பட்டு முதன் முதலாக இணையம் உருவாக்கப்பட்டது.
கடற்குதிரைக் குடும்பத்தைச் சேர்ந்த குழாய்மீன் இனத்தில் முட்டைகளை ஆண்கள் தம் உடலுள் சுமக்கின்றன. அவை அவ்வாறு கருவுற்றிருக்கையில் சில கருக்களை தம் உடலுள் உறிஞ்சிக் கொள்ளும் மாறுபட்ட தன்னின உண்ணும் நிகழ்வு அறியப்பட்டுள்ளது.
117,000 நபர்களால் பேசப்படும் கிறீ (Cree) மொழியே கனடாவில் அதிகம் பேசப்படும் முதற்குடிமக்கள் மொழி.
அறிவியல் தமிழ் மன்றம் என்பது அறிவியல் தமிழை வளர்த்திடும் முயற்சிகளை ஒருங்கிணைக்கவும், திட்டமிட்ட வளர்ச்சிக்கு வழிகாணவும் என தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும்.
காம சூத்திரம் (வடமொழி: कामसूत्र) என்பது காமம் தொடர்பான ஒரு பண்டைய வடமொழி நூலாகும்.
செய்திகளில்
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற தொடருந்து வண்டி அநுராதபுரம் தடம் புரண்டதில் 36 பயணிகள் காயமடைந்தனர்.
அமெரிக்கர்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வழி செய்யும் அதிபர் பராக் ஒபாமாவின் முக்கிய உள்நாட்டு கொள்கைக்கு ஆதரவாக அமெரிக்க மேலவை வாக்களித்துள்ளது.
இயேசு நாதர் (படம்) வாழ்ந்த காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் மிகத் தொன்மையான வீடு ஒன்றை இசுரேலின் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
போயிங் டிரிம் லைனர் 787 இன் முதல் சோதனை ஓட்டம் இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகள் வானிலைமாற்றம் மாநாடு 2009 டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் ஆரம்பமானது.
இலங்கைக்கு எதிரான மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று தேர்வுத் துடுப்பாட்டத் தொடரை கைப்பற்றியுள்ள இந்தியத் துடுப்பாட்ட அணி, தேர்வுத் துடுப்பாட்ட அணிகளுக்கான உலகத் தரவரிசையில் முதல் தடவையாக முதல் இடத்துக்கு வந்துள்ளது.
வங்காளதேசத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 20 பேர் கொல்லப்பட்டு குறைந்தது 45 பேர் காயமடைந்தனர்.
விக்கிசெய்திகள் - மேலும் செய்திகள்..
விக்கிப்பீடியர் அறிமுகம்
கே. எஸ். பாலச்சந்திரன் ஈழத்தின் நாடக, திரைப்படக் கலைஞர். புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வாழ்கிறார். 2007 முதல் ஈழத்துக் கலைஞர்கள், நாடகத் துறை, திரைப்படத் துறை முதலிய துறைகளில் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.
இன்று...
டிசம்பர் 25: கிறிஸ்துமஸ் பண்டிகை
1796 - ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி வேலு நாச்சியார் (படம்) இறப்பு.
1932 - சீனாவில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் 70,000 பேர் கொல்லப்பட்டனர்.
1941 - இரண்டாம் உலகப் போர்: ஹொங்கொங் மீதான ஜப்பானின் ஆக்கிரமிப்பு ஆரம்பமாயிற்று.
1991 - சோவியத் தலைவர் பதவியில் இருந்து மிக்கைல் கொர்பச்சோவ் விலகினார். அடுத்த நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
அண்மைய நாட்கள்: டிசம்பர் 24 – டிசம்பர் 23 – டிசம்பர் 22
No comments:
Post a Comment