Monday, October 29, 2007

அண்ணை றைற் - ஒலித் தட்டு (C.D)

அண்ணை றைற் - ஒலித் தட்டு (C.D) - கனடாவிலும் அவுஸ்திரேலியாவிலும் ஒரே நாளில்



கனடாவில்

கே. எஸ். பாலச்சந்திரனின் "அண்ணை றைற்" தனி நடிப்பு உள்ளிட்ட ஐந்து தனிநடிப்பு நகைச்சுவை நிகழ்ச்சிகள் அடங்கிய ஒலித் தட்டு (C.D) ஒக்ரோபர் மாதம் ஏழாம் நாள், ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30க்கு கனடாவில் டொரொன்ரொ மாநகரில் அஜின்கோட் கொம்யுனிற்றி சென்ட்ர் ( Agincourt Community Centre, 31, Glen Watford Drive) மண்டபத்தில் வெளியிடப்படவிருக்கிறது.

அவுஸ்திரேலியாவில் சிட்னியில்
ஈழத்தின் புகழ்பூத்த நாடகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் தனி நடிப்பு நாடகங்களின் இறுவட்டு வெளியீடு நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு பரமற்றா நகர மண்டபத்தில் நடைபெற இருக்கின்றது. சிட்னியின் முதல் தமிழ் வானொலி "தமிழ் முழக்கம்" தனது 15 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சிறப்பு நாளில் இந்த நிகழ்வு அரங்கேறவுள்ளது.

உலகத்தின் ஒரு அந்தத்தில் இருக்கும் கனடாவிலும், மறு அந்தத்தில் இருக்கும் அவுஸ்திரேலியாவிலும் ஒரே நாளில் இந்த நிகழ்வு நடைபெறுவது இன்னும் சிறப்பானதொரு விடயம்.

மேலதிக செய்திகளும், நிகழ்வுப்படங்களும் பின்னர் வரும்.
http://2cinaustralia.blogspot.com/







இலங்கையின் முதலாவது தமிழ் தனி நடிப்பு (First Tamil stand-up comedy)நிகழ்ச்சியான " அண்ணை றைற்" இவ்வாண்டு 34 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

1973ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் திகதியன்று இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் ஆறாம் இலக்க கலையகத்தில் பார்வையாளர்களுக்கு முன்னால் ஒலிப்பதிவு செய்யப்பட்ட "கும்மாளம்" நிகழ்ச்சியில் முதன்முதலாக நிகழ்த்தப்பட்டது.

தொடர்ந்து இலங்கையின் பல பகுதிகளிலும் பல மேடைகளிலும், 1974ல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழாராய்ச்சி மகாநாட்டின் போதும் அரங்கேறியது.

ஒலிப்பதிவு நாடவாக உலகெங்கும் வாழும் தமிழ் அன்பர்கள் வீடுகள் எல்லாம் சென்றடைந்த " அண்ணை றைற்", அதன் தொடர்ச்சியாக உலகின் பல நாடுகளிலும் நேரடியாக மேடையேறியது.

1989ல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரிலும், சுவிஸ் நாட்டின் பேர்ன் நகரிலும் நேரில் தோன்றி " அண்ணை றைற்" நகைச்சுவை விருந்தளிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

தொடர்ந்து எத்தனை நகரங்களில் -
ரொரன்ரொ, சான்பிரான்சிஸ்கோ, பொஸ்ரன், வன்கூவர், சியாற்றில், நியூயோர்க், மியாமி, லொஸ் ஏஞ்சல்ஸ், ஹியூஸ்ரன், நியூ ஜேர்சி, வின்னிபெக், சஸ்கட்டூன், கல்காரி, எட்மண்ரன்....

34 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்ய ஒலித்தட்டாக (Compact Disc) வெளி வருகிறது.

7/29/2007

'அண்ணை றைற்' இறுவட்டு(CD) வெளியீடு - படங்கள்

"கனடாவில்"

கே. எஸ். பாலச்சந்திரனின் "அண்ணை றைற்" தனி நடிப்பு உள்ளிட்ட ஐந்து தனிநடிப்பு நகைச்சுவை நிகழ்ச்சிகள் அடங்கிய ஒலித் தட்டு (C.D) ஒக்ரோபர் மாதம் ஏழாம் நாள், ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00க்கு கனடாவில் டொரொன்ரொ மாநகரில் அஜின்கோட் கொம்யுனிற்றி சென்ட்ர் ( Agincourt Community Centre, 31, Glen Watford Drive) மண்டபத்தில் வெளியிடப்பட்டட்து.



நிகழ்ச்சித் தொகுப்பு - துஷி ஞானப்பிரகாசம்


தமிழ் வாழ்த்து/கனேடிய தேசிய கீதம் - பாரதி க்லைக்கோயில் மாணவிகள்













மேடையில் - எஸ். எஸ். அச்சுதம்பிள்ளை, கே. எஸ். பாலச்சந்திரன், பொன்.கனகசபாபதி, கவிஞர் கந்தவனம், உதயன் ஆர்.என். லோகேந்திரலிங்கம்



பார்வையாளர்கள்



வரவேற்புரை - எஸ். மதிவாசன்


தலைமையுரை பொன். கனகசபாபதி


ஆசியுரை - ஆர். என். லோகேந்திரலிங்கம்


வெளியீட்டுரை - கவிஞர் கந்தவனம்


எம். ரஜீவிகரன் கெளரவிக்கப்படுகிறார்


ஓவியர் கருணா கெளரவிக்கப்படுகிறார்


பி. விக்னேஸ்வரன் கெளரவிக்கப்படுகிறார்.


எஸ்.வி. வர்மன் கெளரவிக்கப்படுகிறார்


எஸ். ராஜ் கெளரவிக்கப்படுகிறார்


கவிஞர் பொன்னாடை போர்த்துகிறார்
















வாழ்த்துரை - பி. விக்னேஸ்வரன்






வாழ்த்துரை - எஸ்.எஸ். அச்சுதம்பிள்ளை


சிறப்புப் பிரதி - மனுவல் ஜேசுதாசன்


சிறப்புப் பிரதி - குணா செல்லையா


சிறப்புப் பிரதி - ஸ்ரீதவராஜா


சிறப்புப் பிரதி - இளையபாரதி


சிறப்புப் பிரதி - கீதவாணி ராஜ்குமார்


பிரம்மஸ்ரீ விஜயகுமாரக்குருக்கள் சந்தனமாலை அணிவிக்கிறார்


பிரம்மஸ்ரீ விஜயகுமாரக்குருக்கள், பிரம்மஸ்ரீ பஞ்சாட்சரக்குருக்கள் உடன்


வாழ்த்து - மனுவல் ஜேசுதாசன்


வாழ்த்து - கதிர் துரைசிங்கம்


பதில் உரை - கே.எஸ். பாலச்சந்திரன்







அவுஸ்திரேலியா - சிட்னியில்


ஈழத்தின் புகழ்பூத்த நாடகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் தனி நடிப்பு நாடகங்களின் இறுவட்டு வெளியீடு ஒக்டோபர் 7ந்திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு பரமற்றா நகர மண்டபத்தில் சிட்னியின் முதல் தமிழ் வானொலி "தமிழ் முழக்கம்" தனது 15 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் சிறப்பு நாளில் நடைபெற்றது.


எழுத்தாளர் காவலூர் இராசதுரையிடமிருந்து வானொலி மாமா மகேசன் முதல் பிரதியை பெறுகிறார்.



பார்வையாளர்கள்

10/12/2007

லண்டனில் "அண்ணை றைற்" பற்றிய குறிப்பு

லண்டனில் காந்தி மக்கின்ரயர்!
- நவஜோதி ஜோகரட்னம் (லண்டன்) -



ஈழத்தில் ஆங்கில நாடக வரலாற்றில் மட்டுமே அறிமுகப்பட்டிருந்த நாடகக் கலைஞரான காந்தி மக்கின்ரயரை தமிழ் நாடக மேடையில் தரிசிக்க முடிந்தது பெரும் பாக்கியம் என்றே கூறவேண்டும். விம்பம் அமைப்பின் நான்காவது ஆண்டு நிகழ்வில் லண்டனில் பிறன்ற் நகர மண்டபத்தில் சென்றமாத இறுதியில் காந்தி மக்கின்ரயரின் ‘சாரத்தின் மகிமை’, ‘வாத்தியார்’ ஆகிய இரு நாடகங்களும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து ஈர்த்த நாடகம் என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை. பேராதனை, கொழும்பு ஆகிய நாடக அரங்கில் தனிப்பெரும் ஆளுமையாகக் கருதப்படும் ஏனர்ஸ்ட் மக்கின்ரயரின் சகோதரரான காந்தி மக்கின்ரயர் நாடகத்தையே தன் உயிர் மூச்சாகக் கருதும் கலைஞர் ஆவார்.

ஹொலிவூட் திரைப்படத்தில்
கொழும்பு மெதடிஸ்ற் (Methodist) நாடக சங்கத்தில் இருந்து உருவாகி டLionel Wendt அரங்கில் வளர்ந்து லண்டன் Drama Studio வில் புலமைப் பரிசில் பெற்று நாடகக் கலையைக் கற்றுத்தேர்ந்த நாடகக் கலைஞர் ஆவார். அவுஸ்திரேலியாவுக்குப் புலம் பெயர்ந்ததின் பின்
தன் வாழ்விற்கான ஆதாரமாக நாடகத்தையே வரித்துக்கொண்ட துணிச்சல்காரர். இருபதுக்கும் மேற்பட்ட ஆங்கில ஹொலிவூட் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்த அனுபவம் மிகுந்தவர் காந்தி மக்கின்ரயர். இன்றும் அவுஸ்திரேலியாவில் மேடையேறும் ஆங்கில நாடகங்களில் காந்தி மக்கின்ரயரின் அழுத்தமான நடிப்பாற்றலைக் காணமுடிகின்றது.

தனிநபர் அரங்கு
காந்தி மக்கின்ரயரின் நாடகங்களை லண்டனில் அறிமுகப்படுத்தி உரையாற்றிய விமர்சகர் மு. நித்தியானந்தன் ஈழத்துத் தமிழ் நாடக அரங்கில் தனிநபர் நாடக அரங்கு புதியது அல்ல என்றும் ‘அண்ணை றைற்’ போன்ற நகைச்சுவை நாடகம் மூலம் கே.எஸ். பாலச்சந்திரன் தனிநபர் நகைச்சுவை நாடக வடிவத்திற்கு அடித்தளமிட்டவராகத் திகழ்கின்றார்
என்றும் குறிப்பிட்டார். இன்று தமிழர்களின் புலம்பெயர் வாழ்வில் காந்தி மக்கின்ரயர் அறிமுகப்படுத்தும் தனிநபர் நாடக அரங்கு நமது சூழலுக்கு மிக மிகப் பொருத்தமானது என்றும் அவர்
மேலும் தெரிவித்தார்.

Stand up comedy என்ற நகைச்சுவை நாடக வகை, ஆற்றல் மிகுந்த ஒரு நகைச்சுவை நடிகர் தொடர்ச்சியாக நகைச்சுவை நிகழ்ச்சிகளை உருவாக்கியும் பேசியும் நடித்தும் தொய்வு விழுந்து விடாமல் ரசிகர்களை சிரிப்பு வெள்ளத்தில் ஆழ்த்துகின்ற ஒரு நாடக வடிவமாகும். கைதேர்ந்த நடிப்பும் லாவகமும் கருத்துச்செறிவும் துரிதகதியும் இத்தகைய தனிநபர் நகைச்சுவை நாடக வடிவத்திற்கு முக்கிய அம்சங்களாகும்.

29.10.2007
navajothybaylon@hotmail.co.uk

(ந்ன்றி - பதிவுகள்)

No comments:

Post a Comment