Wednesday, October 20, 2010

காலச்சுவடு இதழில் எனது நாவல் விமர்சனம்இம்மாத காலச்சுவடு இதழில் (ஒக்டோபர் 2010) எனது நாவலான "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" பற்றிய விமர்சனம் வெளிவந்துள்ளது. பிரபல் ஊடகவியலாளரும், எழுத்தாளருமான பி.விக்னேஸ்வரன் மதிப்புரையை எழுதியிருக்கிறார்.எனது நாவலுக்கு கிடைத்த ஏழாவது விமர்சனத்தை பிரசுரித்த "காலச்சுவடு" நிர்வாகத்திற்கும், நிர்வாக ஆசிரியர் கண்ணன், பொறுப்பாசிரியர் தேவி பாரதிக்கும் என் நன்றி.

" 1970ஆம் ஆண்டு கே.எஸ்.பாலச்சந்திரன் இலங்கையில் வானொலிக் கலைஞராகத் தெரிவுசெய்யப்பட்டு, நாடக ஒலிப்பதிவுகளுக்கு வரும்போது ஏற்பட்ட அறிமுகம் பின்னர் நான் தயாரிப்பாளனாக வானொலியிலும் தொலைக்காட்சியிலும் தயாரித்த பல நாடகங்களில் அவர் பங்குபற்றியதன்மூலம் மேலும் நெருக்கமானது. அங்குள்ள கலைஞர்களில் நான் மிக நெருக்கமாகப் பழகிய ஒருசிலரில் பாலச்சந்திரனும் ஒருவர். சினிமா, நாடகம், எழுத்திலக்கியம் என்று எந்தத் துறை பற்றியும் சம்பாஷpக்கக்கூடியவர் பாலச்சந்திரன். கலைத்துறையில் அவரது பன்முக ஆற்றல், ஈடுபாடு பற்றியெல்லாம் மிக விளக்கமாக பி.எச். அப்துல் ஹமீட் அவர்கள் 'கரையைத் தேடும் கட்டுமரங்கள்' நாவலின் முகவுரையில் விபரித்திருக்கிறார்.

பாலச்சந்திரனின் பன்முக ஆற்றல்பற்றி அறிந்திருக்கும் எனக்கு அவரது மிகப்பிந்திய ஒரு வெளிப்பாடான நாவலாசிரியர் முகம் மிகுந்த வியப்பை அளிக்கிறது. இவர் இந்த ஆற்றலை முன்பே வெளிக்காட்டியிருந்தால் எழுத்துலகிலும் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவராக இருந்திருப்பார். ஒருவேளை அவரது நீண்டகால பல்துறை அனுபவங்கள்தான் இப்படி யொரு ஆற்றலாக வெளிப்படுகிறதுபோலும் என்றும் கருதுகிறேன்.|


தொடர்ச்சியை காலச்சுவடு இணையப்பக்கத்தில் இங்கே பார்க்கலாம்.

சிலிர்க்கவைக்கும் மைதிலியின் ஆங்கிலக்கவிதைகள்

"நான் விரும்பித்தேடிய வாழ்வு இதுவல்ல..
நான் பாட நினத்த பாடல் இதுவல்ல..
நான் நடக்கவேண்டிய பாதை இதுவல்ல..
நான் காணவேண்டிய கனவு இதுவல்ல.
நான் செய்யவேண்டிய புன்னகையும் இதுவல்ல..
நான் இருக்கவேண்டிய இடமும் இதுவல்ல..

ஆனாலும் நான் வாழ்கிறேன் இந்தப்பாதையில் பாடிக்கொண்டே நடக்கிறேன்
நான் எங்கிருந்தாலும் கனவு கண்டு புன்னகைக்கிறேன்
என்னுடையது இந்த வாழ்வுதான்..அதுவே எனக்குள்ளதென்று தெரியும்
என் வாழ்வைநோக்கி, என் கனவை நோக்கி நான் பாடுகிறேன்"

This ain't-the morn that should dawn என்று ஆரம்பிக்கும் இந்தக் கவிதையின் தலைப்பே தனித்தன்மையுடன் தொனிக்கிறது.

இதுவல்ல- வாழ்க்கைக்கான பாடல்(This ain't - a song for life)

வாழ்க்கைக்கான இந்தப்பாடலையே இதுவல்ல வாழ்க்கைக்கான பாடல் என்றும் எதிர்மறையாக அர்த்தப்படுத்தியும் கொள்ளலாமல்லவா?

வாழ்வில் எங்கள் எதிர்பார்ப்புகள் எல்லாமே நிறைவேறாமல் போனாலும் எங்கள் வாழ்வு தொடரத்தான் செய்யும்- கிடைத்த அதே பாதையில்..

ஆங்கிலத்தில் நெஞ்சத்தை சிலிர்க்கவைக்கும் கவிதை..

மைதிலி மெளலியின் இந்தப்பக்கத்தில்..

Friday, October 15, 2010

அமர்க்களமான திருமண அழைப்பு..

குப்பைத்தொட்டியில் நான் பார்த்து ரசித்த இந்த அட்டகாசமான திருமண அழைப்பை பார்த்ததும் உங்களுக்கும் காண்பிக்கவெண்டும் என்ற எண்ணத்தில் கொண்டுவந்திருக்கிறேன்.

என்ன யோசிக்கிறீர்கள்? இந்த ஆள் குப்பைதொட்டியில் ரகசியமாக கைவிட்டு தேடுகிற ஆளா..என்று தீர்க்கமான ஒரு முடிவு எடுக்கிறதுக்கு முதல் சொல்லுகிறேன்..

இணயத்தில் உள்ள குப்பைத்தொட்டியில் எடுத்தது..இதுஇந்த அழைப்பிதழைப் பார்த்ததும், எனது மகள் உமாவின் முதலாவது பிறந்தநாளுக்கு நான் எழுதி அச்சிட்டுக் கொடுத்த அழைப்பிதழின் நினைவு வருகிறது. மகளே அழைப்பதாக மழலைத் தமிழில் எழுதியிருந்தேன். நண்பர்கள்,உறவினர் மத்தியில் அதற்கு ஒரு தனி வரவேற்பு. பலபேர் அதேமாதிரி செய்தார்கள். எப்போது என்கிறீர்களா..1977ல். (உமாவுக்கு 5 வயதில் ஒருமகன் இப்போது இருக்கிறான்)

குப்பைதொட்டியில் பலதும் பத்துமாக சுவையாக இருக்கிறது. ருசிகரமான சொந்த அனுபவங்களையும், குட்டிக்கதைகளையும்..சினிமாவிமர்சனங்களையும் வாசிக்கலாம்.ரசித்தேன்..நீங்களும் போய் ரசிக்கலாமே..

http://nanaadhavan.blogspot.com/2009_11_01_archive.html

Tuesday, October 12, 2010

சிங்கை வாழ் தமிழ் நெஞ்சங்களே..

சிங்கப்பூர் தேசிய் நூலகம் எனது "கரையைத் தேடும் கட்டுமரங்கள்" நாவலை தனது கிளைகளில் இடம் பெறச்செய்திருக்கும் சந்தோசமான செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
ஒரு இலங்கை எழுத்தாளனின் படைப்புக்கு அவர்கள் காட்டியிருக்கும் ஆதரவுக்கு மனப்பூர்வமான நன்றி.

பின்வரும் நூலககிளைகளில் எனது நாவலை நீங்கள் பெற்று படித்துக் கொள்ளலாம்.

1 Ang Mo Kio Public Library Adult Lending Tamil
2 Bedok Public Library Adult Lending Tamil BAL On Loan 02/10/2010
3 Bukit Merah Public Library Adult Lending Tamil
4 Choa Chu Kang Public Library Adult Lending Tamil
5 Geylang East Public Library Adult Lending Tamil
6 Jurong Regional Library Adult Lending Tamil
7 Marine Parade Public Library Adult Lending Tamil
8 Sembawang Public Library Adult Lending Tamil
9 Woodlands Regional Library Adult Lending Tamil

Thursday, October 7, 2010

இணையத்தில் - கரையைத் தேடும் கட்டுமரங்கள்


இணையத்தில் எனது நாவலான "கரையைதேடும் கட்டுமரங்கள்" பற்றிய கருத்துக்களை பின்வரும் தளங்களில் பதிவு செய்த கானாபிரபா,சயந்தன், கரவைக்குரல், தமிழ்கலைஞன், குரு அரவிந்தன், அகில், வல்வை சாகரா ஆகியோருக்கு நன்றி.

மடத்து வாசல் பிள்ளையாரடி இணையத்தளம்

சாரல் இணையத்தளம்

கரவையின் குரல்

கரும்பு வலைப்பூ

தமிழமுதம்

தமிழ் படைப்பாளிகள் தளம்

திண்ணை

Friday, October 1, 2010

"தூறல்" பெருக்கின்றது....


"தூறல்" பெருத்தால் அது மழைதான்..!

கனடாவில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வெளிவரும் சஞ்சிகையான "தூறல் .. " அட்டகாசமாக வண்ணத்தில் தோய்த்தெடுத்தது போல வெளிவந்து, இலவசமாக எல்லோரினதும் கைகளில் தவழ்ந்தபோது, மனதிற்குள் ஒரு சந்தேகம் எழ்த்தான் செய்தது.

இவ்வளவு அழ்கான அச்சமைப்பில், வழுவழுப்பு காகிதத்தில், கவர்ச்சியான படங்க்ளுடன், ஒருபக்கம், இரண்டு பக்கங்களுக்கு மேலாகப் போகாத படைப்புகளுடன் எத்தனை நாட்களுக்கு சாத்தியமாகும் என்ற சந்தேகம்தான்.

அந்த சந்தேகங்கள் யாவையும் தகர்த்தெறிந்து கொண்டு, இதோ முதல்வருட முடிவில் நான்காவது இதழும் எங்கள் கைகளுக்கு கிடைத்து விட்டது.

இன்னமொரு திருப்பம். அ.முத்துலிங்கம், என்.கே.மகாலிங்கம், குரு அரவிந்தன், கவிஞர் கந்தவனம், அதிபர் பொ.கனகசபாபதி என்று அறியப்பட்டவர்கள் யாவரும் எழுதுகிறார்கள்.

முதலாவது இதழில் இருந்து "என் மனவானில்" என்ற எனது நினைவுத்தொடர் கட்டுரை வருவது தனிச்சந்தோசம்.

"தூறல்" சஞ்சிகைக்கு பொறுப்பானவர்களின் கைகளைப் பற்றி உற்சாகமாக குலுக்க விருப்பமாகவிருக்கிறது. விளம்பரதாரர்களின் ஆதரவு தாராளமாக கிடைத்தால் "தூறல்" பெருமழையாகி, எங்களை ஆனந்தம் கொள்ளவைக்கும்..

பிரதம ஆசிரியரான ராஜ்மோஹன் செல்லையாவுக்கு ஒரு பூங்கொத்து. பிடியுங்கள்.