Sunday, September 13, 2009

"கரையைத் தேடும் கட்டுமரங்கள்" - எனது நாவல்



தினமும் வாழ்வுக்காக அலைகளோடு ஜீவமரணப்போராட்டம் நடத்தி மீளும் அல்லது தோற்றுப்போகும் ஒரு சமூகத்திடம் எனக்குள்ள நியாயமான மதிப்பும், இரக்கமும்;தான் என்னை இந்த நாவலை எழுதத்தூண்டியிருக்கிறது. – கே.எஸ்.பாலச்சந்திரன்

பகலும் இரவும் முத்தமிட்டுக் கொள்ளும் அந்த மாலைப்பொழுதில்...
மேற்கிலிருந்து அடித்த வாடைக் கச்சான் காற்று, கடற்கரையை பார்த்துக்கொண்டு நின்றிருந்த அந்தோனியின் பொத்தான்கள் இல்லாத சேர்ட்டை பின்னே தள்ளி நெஞ்சுக்கூட்டை குளிரினால் சில்லிட வைத்தது.

- “கரையைத்தேடும் கட்டுமரங்கள்” நாவலிலிருந்து


கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் எழுதிய கடலோடிகளின் கதை சொல்லும் நாவல் -

கரையைத்தேடும் கட்டுமரங்கள் வெளியீட்டுவிழா
ஒக்டோபர் 3' 2009
சனிக்கிழமை
மாலை 5.30க்கு
இடம்:
அஜின்கோட் சமூக நிலையம்
31, கிளென் வாட்போர்ட் டிறைவ்
ஸ்காபரோ, ஒன்ராரியோ



குமுதம் குழுமம் சார்ந்த "தீராநதி" சஞ்நிகையின் செப்ரம்பர் 2009 இதழில் -







நடிகர் கமலஹாசன் எனது நாவலுடன் -
என் நெருங்கிய நண்பனும், எனது நாவலுக்கு முன்னுரையெழுதியிருப்பவருமான உலகறிந்த தமிழ் ஒலிபரப்பாளனான பி.எச்.அப்துல் ஹமீட் மூலமாக நான் நடிகர் கமலுக்கு அறிமுகமாகியதும், எனது நாடக ஒலி நாடாக்கள் அவருக்கு "தெனாலி" திரைப்படத்தில் உதவியாகவிருந்ததும், அதை "தெனாலி" வெள்ளிவிழா மேடையில் கமல் குறிப்பிட்டு என்னை பெருமைப்படுத்தியதையும் மகிழ்வுடன் நினைவு கூருகிறேன்.

அண்மையில் நண்பர் ஹமீட், நடிகர் கமலைச் சந்தித்தபொழுது, எனது நாவலை அவருக்கு கொடுத்து இருக்கிறார். கமலை நான் கனடாவில் சந்தித்து உரையாடியவற்றை அவர் நினைவுபடுத்தியருக்கிறார். சந்தோசமான நிகழ்வுகள்...

1 comment:

  1. அன்புள்ள திரு.பாலச்சந்திரன்,
    உங்கள் பக்கங்களை வாசித்தேன். உண்மையில் நீங்கள் எனது கதையைப் படித்துவிட்டு கருத்தளித்தமையை மிகவும் மதிப்புக்குரியதாக நினைக்கிறேன். எனது ‘தற்செயலாய் பறிக்கப்பட்ட ஒரு மலர்‘ என்ற சிறுகதையை நேரமிருப்பின் வாசியுங்கள். அன்புக்கு நன்றி. உங்கள் மின்னஞ்சல் முகவரி தர இயலுமா ? உங்கள் புத்தகம் எங்கு கிடைக்கும் ? நான் அக்டோபர் 2009 ‘அகநாழிகை‘ என்ற சமுக கலை இலக்கிய இரு மாத சஞ்சிகையை வெளிக்கொண்டுவர இருக்கிறேன்.
    எனது மின்னஞ்சல் : aganazhigai@gmail.com

    ‘அகநாழிகை‘
    பொன்.வாசுதேவன்

    ReplyDelete